ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தவறியுள்ளதாக குற்றச்சாட்டு!
In ஆசிரியர் தெரிவு October 25, 2018 6:10 am GMT 0 Comments 1677 by : Benitlas

ரூபாயின் வீழ்ச்சியை கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதார கல்வி பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் பிரியங்க துனுசிங்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “இதுவரையில் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும் போது ரூபாயின் பெறுமதி 174.12 ரூபாயாக பதிவாகியுள்ளது.
ரூபாயின் வீழ்ச்சியை தடுப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ள வேண்டிய கொள்கையை உரிய முறையில் செயற்படுத்த வேண்டும்.
பிராந்திய நாடுகள் தங்கள் பணத்தை பாதுகாப்பதற்கு செயற்படுத்தியுள்ள கொள்கைகளுடன் ஒப்பிடும் போது, இலங்கை அரசாங்கம் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை.
இதற்கமைய இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைவதற்கு அரசாங்கத்தின் செயற்பாடு தான் காரணம்“ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.