ரெட்புல் வல்பெரய்சோ செர்ரோ அபாஜோ எர்பன் டவுண்ஹில் மவுண்டய்ன் சைக்கிள் பந்தயம்!
In விளையாட்டு February 12, 2019 6:34 am GMT 0 Comments 1347 by : Anojkiyan
விளையாட்டுக்கள் பொதுவாக வித்தியாசமானதாகவும், ஆபத்தானதாகவும் இருந்தால் அது அனைவரினதும் கவனத்தை வெகுவாக ஈர்த்துவிடும் என்பார்கள்.
அதற்கு உதாரணமான ஓரு விளையாட்டு குறித்து தான் இன்றைய தினம் ஆதவன் உங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளது.
சைக்கிளோட்ட பந்தயம் என்பது மிகவும் கடினமான ஓர் விளையாட்டாக பார்க்கப்படுகின்றது. அப்படியான ஓர் விளையாட்டையே ஆபத்து நிறைந்த பாதைகளில் ஓடினால் எப்படியிருக்கும்?
அப்படி ஆபத்து நிறைந்த விளையாட்டு தான் இந்த ரெட்புல் வல்பெரய்சோ செர்ரோ அபாஜோ எர்பன் டவுண்ஹில் மவுண்டய்ன் சைக்கிள் பந்தயம்.
குறுகிய பாதைகள், ஏற்ற தாழ்வு நிறைந்த பாதைகள், பலகையினால் செய்யப்பட்ட செயற்கை பாதைகள், கரடுமுரடான பாதைகள், படிகட்டுகள், என ஒட்டுமொத்த ஆபத்துக்களை ஒருங்கிணைத்த வாறு நடத்தப்பட்ட சைக்கிளோட்ட பந்தயமொன்று சிலியின் வல்பெரய்சோவில் நடத்தப்பட்டது.
இதில் உயிரை பொருட்படுத்தாது சாதனை என்ற மகத்தான ஓரு விடத்தை மட்டும் மனதில் கொண்டு பல நாட்டு வீரர்கள் இதில் கலந்துக் கொண்டனர்.
இந்த பந்தயதானது வல்பெரய்சோவில் நகரில் இருந்து யுனெஸ்கோ துறைமுக வீதியினுடாக இப்போட்டி நடத்தப்பட்டது.
2 கிலோ மீற்றர் பந்தய தூரத்தை கொண்ட இந்த ஆபத்து நிறைந்த போட்டியில், சாதித்தவர்களின் விபரங்களை தற்போது பார்க்கலாம்.
இதில் உள்ளூர் வீரரான பெட்ரோ ஃபெர்ரைரா 2 நிமிடங்கள் 50.084 வினாடிகளில் பந்தயத் தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார்.
மற்றொரு உள்ளூர் வீரரான பெலிப்பெ அகர்டோ 0.468 வினாடிகள் பின்னிலையில், பந்தயத் தூரத்தை கடந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
மூன்றாவது இடத்தை ஜேர்மனியின் ஜோஹானஸ் பிஸ்ச்பாக், 0.711 வினாடிகள் பின்னிலையில், பந்தயத் தூரத்தை கடந்து மூன்றாவது இடத்தை பிடித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.