ரொனால்டோ கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக இத்தாலி ஊடகங்கள் தகவல்!
In உதைப்பந்தாட்டம் January 30, 2021 6:35 am GMT 0 Comments 1713 by : Anojkiyan

உலகின் புகழ் பூத்த கால்பந்து வீரரான கிறிஸ்டினா ரொனால்டோ, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறையை மீறியதாக இத்தாலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பீட்மாண்ட் மற்றும் வாலே டி ஆஸ்டா பகுதிகளுக்கு இடையில் பயணம் செய்வதன் மூலம் கொவிட் 19 விதிகளை மீறியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் தனது காதலி ரோட்ரிக் பிறந்த நாளுக்காக துரின் நகரிலிருந்து 150 கி.மீட்டர் பயணம் செய்து கோர் மேயுர் பகுதிக்கு சென்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது இத்தாலியில் விதிக்கப்பட்டுள்ள கொரோனா கட்டுபாடுகள் பற்றி துரின் நகரில் இருந்து ஜோடியாக வெளியேற கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை ரொனால்டோ மீறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ரொனால்டோ மேற்கொண்ட பயணம் குறித்து இத்தாலிய பொலிஸாரால் விசாரணை நடத்தப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.