ரொறன்ரோவில் தடைப்பட்ட மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளது!

ரொறன்ரோவின் கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நிலக்கீழ் குண்டுவெடிப்பினால், துண்டிக்கப்பட்ட மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேப் வீதி மற்றும் ஜெராட் வீதி பகுதியில், நேற்று முன் தினம் (வியாழக்கிழமை) பிற்பகல் 1.55 அளவில் நிலக்கீழ் சுரங்கத்தினுள் அமைக்கப்பட்டுள்ள மின் விநியோக கட்டமைப்பில் தீப்பரவல் ஏற்பட்டது.
இந்த வெடிப்பினைத் தொடர்ந்து அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 600 வாடிக்கையாளர்களுக்கான மின் வினியோகம் துண்டிக்கப்பட்டது.
இந்த நிலையில், குறித்த மின் விநியோகம் தற்போது முழுமையாக சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த வெடிப்பினால் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதாக முறைப்பாடு செய்யப்படாத நிலையில், சில வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.