ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தல் – ஜோன் ரொறி தொடர்ந்தும் முன்னிலை!
In கனடா October 20, 2018 5:07 pm GMT 0 Comments 1331 by : ஜெயச்சந்திரன் விதுஷன்

ரொறன்ரோ மாநகரசபைத் தேர்தலுக்கு இன்னமும் 2 நாட்களே இருக்கும் நிலையில் மேயர் வேட்பாளராக போட்டியில் ஜோன் ரொறி ஏனைய போட்டியாளர்களை விட முன்னணியில் உள்ளதாக அண்மைய கருத்துக் கணிப்பு முடிவுகள் காட்டுகின்னறன.
இந்த நிலையில் ரொறன்ரோ சண் ஊடகம் எழுந்தமானமாக தெரிவு செய்யப்பட்ட 669 வாக்காளர்களிடம் கருத்துக் கணிப்பொன்றை நடாத்தியுள்ளது.
அந்த கருத்துக் கணிப்பில் நகரபிதா ஜோன் ரொறிக்கு மிக நெருக்கமான போடடியாளராக பார்க்க்பபடும் ஜெனீஃபர் கீஸ்மமாத்துடன் ஒப்பிடுகையில், ஜோன் ரொறி 35 சதவீத அதிக ஆதரவினைக் கொண்டுள்ளார்.
ஜோன் ரொறிக்கு ஆதரவளிப்பதாக 62 சதவீதம் பேரும், ஜெனீஃபர் கீஸ்மமாத்துக்கு ஆதரவளிப்பதாக 27 சதவீதம் பேரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த இருவரையும் தவிர ரொரன்ரோ நகரபிதா பதவிக்காக மேலும் 33பேர் போட்டியிடும் நிலையில், அவர்களில் ஒருவருக்கு வாக்களிக்கவுள்ளதாக இநத் கருத்துக் கணிப்பில் கலந்துகொண்டோரில் 12 சதவிதம் பேர் கூறியுள்ளனர்.
பிராந்தியங்களின் அடிப்படையில் ஜோன் ரொறிக்கு அதிக அளவாக நோர்த் யோர்க்கில் 71 சதவீதமும், ஸ்காபரோவில் 66 சதவீதமும், ஈட்டோபிக்கோவில் 66 சதவீதமும், டவுன்ரவுன் மத்திய பகுதியில் 53 சதவீதமும், ஈஸ்ட் யோர்க் பகுதியில் 50 சதவீதமும் ஆதரவு காணப்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.