ரோபோசங்கர் மகளுக்கு கிடைத்த வாய்ப்பு!

சினிமா நட்சத்திரங்களின் வாரிசுகள் சினிமாவில் நடிப்பது இயல்பான ஒன்றுதான். இந்த நிலையில் பிரபல கொமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகளுக்கு முதல் திரபை்படத்திலேயே விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
விஜய்யுடன் ஏற்கனவே ‘புலி’, திரைப்படத்தில் ரோபோ சங்கர் நடித்துள்ள நிலையில் தற்போது அவருடைய மகள் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 63’ திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘தளபதி 63’ திரைப்படம் பெண்கள் கால்பந்து போட்டி குறித்த திரைப்படம் என்பதால் ரோபோ சங்கரின் மகள் கால்பந்து வீராங்கனையாக நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
ஏற்கனவே இத்திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் கதிர் நடிக்கவுள்ளார். அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் தயாரிப்பில் உருவாகவுள்ளது இத்திரைப்படம்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.