‘றோ“ ஒற்றர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு நாட்டை நடத்த முடியாது – விமல்!
In ஆசிரியர் தெரிவு October 25, 2018 3:00 am GMT 0 Comments 1513 by : Benitlas

‘றோ“ ஒற்றர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு நாட்டை நடத்த முடியாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
சட்ட விரோத கடவுச் சீட்டைப் பயன்படுத்தி 23-10-2015 அன்று சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு நேற்று(வியாழக்கிழமை) நீர்கொழும்பு நீதிமன்றின் இரண்டாம் இலக்க அறையில் இடம்பெற்றது.
குறித்த வழக்கு விசாரணையின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “ஜனாதிபதி தேர்தல் தொடர்பான அறிவித்தல் வந்தவுடன் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மைதானத்தில் விளையாடும் வீரரின் பெயரை குறிப்பிடுவார்.
பின்னர் ஏனைய வீரர்களும் இணைந்த விளையாடி வெற்றி பெறுவோம். அமைச்சர் மகிந்த அமரவீரவின் கருத்தின்படி அமைச்சரவையில் “றோ“ அமைப்புக்கு உதவி புரியும் நான்கு அமைச்சர்கள் உள்ளனர்.
தற்போது ஜனாதிபதிக்கு உள்ள பொறுப்பு அந்த நான்கு அமைச்சர்களினதும் காதைப் பிடித்து அவர்களை அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுவதுதான்.
“றோ“ ஒற்றர்களை அமைச்சரவையில் வைத்துக் கொண்டு நாட்டடை நடத்த முடியாது. அந்த அமைச்சர்கள் யார் என்பதை கூற வேண்டும். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தாக்கல் செய்துள்ள வழக்குகள் யாவும் அவர்களுக்கு தோல்வியாவே அமைந்துள்ளன.
ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் வழக்கும் அவ்வாறுதான் அமைந்தது. பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யபடும் வழக்குகளே அவைகளாகும்.
பழிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோவின் வழக்குக்கு ஏற்பட்ட நிலையே ஏற்படும்“ என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.