லங்கன் பிரீமியர் லீக்: முதல் லீக் போட்டியில் கொழும்பு கிங்ஸ்- கண்டி டஸ்கர்ஸ் அணிகள் மோதல்!

பெரும் எதிர்பார்ப்பு மத்தியில் ஆரம்பமாகவுள்ள லங்கன் பிரீமியர் லீக் ரி-20 தொடரின், முதல் லீக் போட்டி இன்று (வியாழக்கிழமை) நடைபெறவுள்ளது.
ஹம்பாந்தோட்டை மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணியும் கண்டி டஸ்கர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இதில் கொழும்பு அணியின் தலைவராக அஞ்சலோ மத்தியூஸூம் கண்டி அணியின் தலைவராக குசல் பெரேராவும் தலைமை தாங்கவுள்ளனர்.
முதல்முறையாக நடைபெறவுள்ள இத்தொடரில் மொத்தமாக ஐந்து அணிகள் பங்கேற்கின்றன. மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறுகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.