லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக நுகர்வோருக்கு சலுகை விலையில் பொருட்கள்!

லங்கா சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக, நுகர்வோருக்கு சலுகை விலையில் பொருட்களை வழங்கும் வகையிலான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாவட்டச் செயலகம் மற்றும் சமுர்த்தி திணைக்களம் என்பன இணைந்து இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளன.
முதற்கட்டமாக கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களை உள்ளடக்கி இந்த வேலைத்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, மேல் மாகாணத்திலுள்ள மக்களுக்கு காய்கறிகளை சலுகை விலையில் பெற்றுக்கொள்ள வசதியேற்படுத்தப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்பட்ட 75 சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக சலுகை விலையில் காய்கறிகளை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.