லங்கா பிரீமியர் லீக் – யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ் அணி 54 ஓட்டங்களால் வெற்றி
In கிாிக்கட் December 2, 2020 9:29 am GMT 0 Comments 1622 by : Dhackshala

நடைபெற்றுவரும் லங்கா பிரீமியர் லீக் தொடரின் எட்டாவது போட்டியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, 54 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
அம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணியும் கண்டி டஸ்கர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 185 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் சார்பாக அவிஷ்க பெனார்டோ 3 ஓட்டங்களையும், மினோத் பானுக 15 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 61 ஓட்டங்களையும் டொம் மொறிஸ் 4 ஓட்டங்களையும் சொயிப் மாலிக் 9 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
திசர பெரேரா 68 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க மற்றும் சதுரங்க டி சில்வா ஆகியோர் தலா 5 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
உஸ்மான் ஷின்வாரி ஆட்டமிழக்காது 6 ஓட்டங்களையும் லக்மால் ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் களத்தில் இருந்தனர்.
கண்டி டஸ்கர்ஸ் அணியின் பந்துவீச்சில், நவீன் உல் ஹக் 3 விக்கெட்டுகளையும் குணரத்ன 2 விக்கெட்டுகளையும் நுவான் பிரதீப் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 186 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கண்டி டஸ்கர்ஸ் அணி, 17.1 ஓவர்கள் நிறைவில் 131 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் யாழ்ப்பாண ஸ்டாலியன்ஸ் அணி, 54 ஓட்டங்களால் சிறப்பான வெற்றியை பதிவுசெய்தது.
இதன்போது கண்டி டஸ்கர்ஸ் அணி சார்பில், ரமஹனுல்லா குர்பாஸ் 6 ஓட்டங்களையும் குசல் பெரேரா 4 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் 20 ஓட்டங்களையும் பிரெண்டன் டெய்லர் 46 ஓட்டங்களையும் கமிந்து மெண்டிஸ் 9 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அசேல குணரத்ன 31 ஓட்டங்களையும் சிக்குகே பிரசன்ன 1 ஓட்டத்தினையும் தில்ருவான் பெரேரா 9 ஓட்டங்களையும் நவீன் உல் ஹக் 4 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
நுவான் பிரதிப் ஓட்டமெதுவும் பெறாதநிலையில் ஆட்டமிழக்க, முனாப் பட்டேல் ஓட்டமெதுவும் பெறாதநிலையில் இறுதிவரையில் களத்தில் இருந்தார்.
கொழும்பு கிங்ஸ் அணியின் பந்துவீச்சில், உஸ்மான் ஷின்வாரி 3 விக்கெட்டுகளையும் சுரங்க லக்மால், திசர பெரேரா மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் ஒலிவர் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக 68 ஓட்டங்களையும் 2 விக்கெட்டுகளையும் சாய்த்த ஸ்டாலியன்ஸ் அணியின் தலைவர் திசர பெரேரா தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.