லங்கா பிரீமியர் லீக் – 4 புள்ளிகளோடு முதலிடத்தில் கொழும்பு கிங்ஸ் அணி!
In விளையாட்டு November 29, 2020 5:34 am GMT 0 Comments 1797 by : Dhackshala

லங்கா பிரீமியர் லீக் தொடரில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
ஹம்பாந்தோட்டை சூரியவௌ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கொழும்பு கிங்ஸ் மற்றும் காலி கிளேடியேடர்ஸ் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
மழைக் காரணமாக 5 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற காலி க்ளேடியேடர்ஸ் அணி, களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு கிங்ஸ் அணி 5 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட்டினை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, 97 என்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாடிய காலி அணி 5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை இழந்து, 62 ஓட்டங்களை மாத்திமே பெற்றுக்கொண்டது.
இதனையடுத்து, கொழும்பு கிங்ஸ் அணி 34 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் கொழும்பு கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 4 புள்ளிகளோடு முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.