லண்டனிலிருந்து ஜேர்மனிக்கு சென்ற பெண்ணிற்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று!

லண்டனிலிருந்து ஜேர்மனிக்கு சென்ற பெண்ணிற்கு புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
முன்பை விட அதிக வேகத்தில் பரவும் வகையில் தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ள புதிய ரக கொரோனா வைரஸ் தொற்று, தற்போது தென்னாபிரிக்கா, சிங்கப்பூர், நெதர்லாந்து, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் பரவத் தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் இந்தப் பட்டியலில், ஜேர்மனியும் இணைந்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை லண்டனிலிருந்து ஜேர்மனி பிராங்பேர்ட் விமான நிலையத்திற்கு வந்த பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா புதிய ரக வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பெண் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் அந்தப் பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த மூன்று பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் புதிய ரக கொரோனா வைரஸ் தொற்றினால், 50 நாடுகள் பிரித்தானியாவுடனான விமானப் போக்குவரத்து தடையினை தொடர்ந்தும் பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.