லண்டனில் இருந்து நாடு திரும்பிய பயணிகளில் 5 பேருக்கு கொரோனா
In இந்தியா December 22, 2020 10:45 am GMT 0 Comments 1443 by : Dhackshala

லண்டனில் இருந்து நாடு திரும்பிய பயணிகளில் 5 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் புதியவகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால், அந்நாட்டுடனான விமான போக்குவரத்து சேவைக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்த நிலையில், தலைநகர் லண்டனில் இருந்து நேற்று இரவு டெல்லி வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட 266 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் பயணிகள் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.