லண்டனில் தொடரும் அதிகமான வெயில்: மகிழ்ச்சியில் மக்கள்
In இங்கிலாந்து June 30, 2018 10:54 am GMT 0 Comments 2022 by : Johnson paiva
இங்கிலாந்து தலைநகரான லண்டனில் இந்த வாரம் தொடர்ச்சியாக அதிகமான வெயில் பதிவாகி வருகின்ற நிலையில் அங்கு வசிப்பவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
லண்டன் காலநிலை ஆராய்ச்சி நிலையத்தின் அறிவிப்பின்படி, நேற்று (வெள்ளிக்கிழமை) இங்கிலாந்தின் மற்றுமொரு வெப்பநாள் எனவும் தலைநகரில் 27 (80.6F) செல்சியஸ் வரையில் வெப்பநிலை காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் 5 வருடங்களின் பின்னர் பரவலாக 30 செல்சியஸ் வெயில் காணப்படும் காலநிலை இப்போதுதான் முதல்முறையாக ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ச்சியான இந்த வெப்பநிலை அதிகரிப்பின் மூலம் அலுவலகங்களுக்குள் பணிபுரிபவர்கள் வெளியே வந்து வெயிலின் வெப்பத்தை ரசிப்பதாகவும் அப்பகுதி மக்கள் குளிரான பானங்கள் மற்றும் ஐஸ் கிரீம் அருந்தி மகிழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் வேல்ஸின் போர்த்மடொக்கில் 32.6 (90.68F) செல்சியஸ் வெப்பநிலை காணப்பட்டது. இதுவே இங்கிலாந்தின் வரலாற்றில் அதியுயர் வெப்பநிலையாக பதிவாகியது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.