லண்டன் பகுதியில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருந்த வீடொன்றில் தீ பரவல்: இருவர் காயம்

ஒன்ராறியோவின் லண்டன் பகுதியில் வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றில் ஏற்பட்ட தீப்பரவலில், மாணவர் ஒருவரும் தீயணைப்பு படை வீரர் ஒருவரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) லண்டன் பகுதியில் அமைந்துள்ள பலசரக்கு கடை ஒன்றின் மேற்தளத்தில், பேன்சேவ் கல்லூரியில் பயிலும் 10 வெளிநாட்டு மாணவர்கள் தங்கியிருந்த, வீடொன்றிலேயே குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீப்பரவல் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் ஒலித்ததையடுத்து, மாணவர்கள், இரண்டாவது மாடியின் ஜன்னல் ஊடாக கீழே குதித்து தப்பியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீப்பரவலால் கட்டிடத்திற்கு இலட்சக் கணக்கில் சேதாரம் ஏற்பட்டுள்ளதாகவும், அருகே இருந்த வீடுகளுக்கும் இதன்மூலம் தீ பரவியதாகவும் கூறப்படுகின்றது.
எனினும், இந்த தீ ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில், இதுகுறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.