லதம் கொடுத்த பரிசு: புதிய மைல்கல்லை எட்டி பிராட் சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட், டெஸ்ட் போட்டிகளில் 400 விக்கெட்டுகள் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார்.
ஆக்லாந்தில் இன்று (வியாழக்கிழமை) ஆரம்பமான நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் டொம் லதமின் விக்கெட்டினை வீழ்த்தியதன் மூலம் அவர் இந்த மைல்கல்லை எட்டினார்.
அத்தோடு, வரலாற்று சிறப்புமிக்க பகல்-இரவு டெஸ்ட் போட்டியில், இந்த சாதனையை அவர் நிகழ்த்தியிருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகின்றது.
31 வயதான ஸ்டூவர்ட் பிராட், 115 டெஸ்ட் போட்டிகளில், 209 இன்னிங்சுகளில் விளையாடி இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். இதுதவிர சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில், 400 விக்கெட்டுகளை கைப்பற்றிய 15வது வீரர் என்ற பெருமையும், இரண்டாவது இங்கிலாந்து வீரர் என்ற பெருமையும் பிராட் பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் அதிக விக்கெட்டுகளை வீழத்திய பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.