லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று!
In இலங்கை February 22, 2021 6:47 am GMT 0 Comments 1168 by : Yuganthini

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து லஹிரு குமார மேற்கிந்திய தீவுகளுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடியாதுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இரண்டாவது வீரர் லஹிரு குமார ஆவார். இதற்கு முன்னதாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட லஹிரு திரிமன்ன தற்போது குணமடைந்துள்ளார்.
இதேவேளை ஏனைய வீரர்களுக்கான பி.சி.ஆர்.பரிசோதனை முடிவுகளும் இன்று இரவுக்குள் கிடைக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.