லுணுகலை – ஹெக்கிரிய பகுதியில் நிலநடுக்கம்
In இலங்கை February 12, 2021 3:52 am GMT 0 Comments 1225 by : Dhackshala

லுணுகலை – ஹெக்கிரிய பகுதியில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை சிறியளவான நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது.
ரிக்டர் அளவு கோலில் ஒரு புள்ளிக்கும் குறைவான அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல குறிப்பிட்டார்.
கடந்த 22ஆம் திகதி வலப்பனை பகுதிக்கு அருகில் 1.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியிருந்தது.
அத்துடன் மடுல்சீமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெக்கிரிய பிரதேசத்திலுள்ள சில பகுதிகளிலும் நிலநடுக்கம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.