வடக்கில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
In இலங்கை January 5, 2021 9:03 am GMT 0 Comments 1340 by : Yuganthini
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் முன்னாள் தலைவர் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 21ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு- கிழக்கில் அனுஸ்டிக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தில் 21ஆம் ஆண்டு நினைவு தினம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சிவஸ்ரீ எஸ்.சிவபாலன் குருக்கள், மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புகளின் ஒன்றிய தலைவர் எஸ்.சிவயோகநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர் க.குககுமரராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் உருவப்படத்திற்கு அகவிளக்கேற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸினால் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் ஞாபகார்த்த உரையும் அதிதிகள் உரையும் நடைபெற்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.