வடக்கில் மீண்டும் மலேரியா நுளம்புகள் அதிகரிப்பு

மலேரியா நோய் காவியாக இனங்காணப்பட்டுள்ள Anopheles Stephensi நுளம்பின் பெருக்கம் துரிதமாக அதிகரித்துள்ளது.
தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பிரசாத் ரணவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ஆம் ஆண்டு மீண்டும் வட மாகாணத்தில் இந்த நுளம்பு இனங்காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். நகரப்பகுதி, நல்லூர் மற்றும் கல்முனை ஆகிய பகுதிகளில் கட்டுப்படுத்த முடியாத வகையில் இந்த நுளம்பு தற்போது துரிதமாக பெருகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை தவிர வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலுள்ள கிணறுகளில் இந்த நுளம்பு பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
தூய்மையான நீரிலேயே இந்த நுளம்பு பெருகுவதாகவும் கிணறுகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறும் அவர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
இந்த நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு மீன்கள் பயன்படுத்தப்படுவதாகவும், எனினும் யாழ்ப்பாணத்திலுள்ள கிணறுகளில் அதிக குளோரின் காணப்படுவதால் நுளம்புகளை கட்டுப்படுத்த பயன்படுத்தும் மீன்கள் குறுகிய காலத்திற்குள்ளேயே உயிரிழப்பதாகவும் தேசிய மலேரியா தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, கடந்த வருடம் மலேரியாவினால் 53 பேர் உயிரிழந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.