வடக்கில் JETEX 2018 கல்விக்கண்காட்சி
In இலங்கை September 21, 2018 8:36 am GMT 0 Comments 1551 by : Yuganthini

வடக்கில் JETEX 2018 எனும் கல்விக்கண்காட்சி மற்றும் வேலை வாய்ப்பு தொடர்பிலான கண்காட்சியொன்று நடைபெறவுள்ளது.
இக்கண்காட்சி எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகி 25 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
யாழ். காங்கேசன்துறை வீதி கொக்குவிலில் அமைந்துள்ள செல்வா மஹால் திருமண மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை பார்வையாளர்கள் கண்காட்சியை பார்வையிட முடியுமென ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த கண்காட்சியின் போது, பிரிட்டீஸ் கவுன்சிலினால் இலவச தேர்ச்சி மட்ட பரீட்சைகள், ஆலோசனை வகுப்புக்களுக்கான பதிவுகள், நூலக வசதிகள், அதற்கான அங்கத்துவ பதிவுகள், இங்கிலாந்து கல்வி மற்றும் பரீட்சை பற்றியதான தகவல்கள் வழங்கப்படவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.