வடக்கு அயர்லாந்தில் பாடசாலைகள் ஜனவரி முதல் வாரத்தில் திறக்கப்படும்!
In இங்கிலாந்து December 19, 2020 7:44 am GMT 0 Comments 1749 by : Anojkiyan

அனைத்து பாடசாலைகளும் பிற கல்வி அமைப்புகளும் ஜனவரி முதல் வாரத்தில் மீண்டும் திறக்கப்படும் என வடக்கு அயர்லாந்தின் கல்வி அமைச்சர் பீட்டர் வீர் தெரிவித்துள்ளார்.
அவர் தனது ‘முக்கிய முன்னுரிமை எப்போதும் நம் குழந்தைகளின் கல்வி, மன ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வைப் பாதுகாப்பதாகும்’ என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘வடக்கு அயர்லாந்தில் எங்களிடம் அதிக எண்ணிக்கையிலான பாதிக்கப்படக்கூடிய குழந்தைகள் உள்ளனர். ஏனெனில் இந்த மாணவர்களில் பலர் பாதுகாப்பான புகலிடமாக உள்ளனர். மேலும் பாடசாலைகளை மூடுவதால் உடனடியாக இந்த பாதுகாப்பான இடத்தை அவர்கள் இழக்க நேரிடும்.
அதனால்தான், ஜனவரி முதல் வாரத்தில் பாடசாலைகள் திறக்கப்படுவது அனைத்து மாணவர்களின் நலன்களுக்காகவே என்று முடிவு செய்துள்ளேன், இதனால் அவர்களின் கல்வி மேலும் பாதிக்கப்படாது’ என கூறினார்.
கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பிறகு அத்தியாவசியமற்ற கடைகள் மூடப்படுவதால் புதிய நடவடிக்கைகள் டிசம்பர் 26ஆம் திகதி தொடங்கும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.