வடக்கு ஆளுநர் பதவியேற்று 100 நாட்கள் நிறைவு – யாழில் விசேட நிகழ்வுகள்
In இலங்கை April 20, 2019 3:33 am GMT 0 Comments 2045 by : Dhackshala
வடக்கு மாகாண ஆளுநராக கலாநிதி சுரேன் ராகவன் கடமைகளை பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைவதை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
இதற்கமைய, யாழ். பண்ணை கடற்கரைப் பூங்கா பகுதியில் மரக்கன்று நாட்டும் செயற்திட்டம் நேற்று காலை இடம்பெற்றது.
அதன்பின்னர் கோப்பாய் நவமங்கை நிவாசத்தில் மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
அத்தோடு, வட. மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த 22 பேருக்கு காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் நிகழ்வும் ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வுகளில், வட. மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், யாழ். மாநகர சபை முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.