News in English
  • முகப்பு
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • சினிமா
  • விளையாட்டு
  • ஏனையவை
    • அறிவியல்
    • வணிகம்
    • ஆன்மீகம்
    • இன்றைய பார்வை
    • சிறப்பு ஞாயிறு
    • ஆதவனின் அவதானம்
    • விரிவாக்கல் பிரிவு
    • மரண அறிவித்தல்

தலைப்பு செய்திகள்

  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • காங்கிரஸினால் ஜனநாயகத்தை வளர்க்க முடியாது: அமித் ஷா
  1. முகப்பு
  2. இலங்கை
  3. வடக்கு- கிழக்கில் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும்!- சி.வி.

வடக்கு- கிழக்கில் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும்!- சி.வி.

In இலங்கை     March 23, 2018 6:58 am GMT     0 Comments     1954     by : Risha

அனைத்து உரிமைகளையும் தம் கைக்குள் மூடி மறைத்துக் கொண்டு நல்லிணக்கம் குறித்து பேசுவோரின் பொறிக்குள் சிக்கினால் எதிர்வரும் பத்தாண்டுக்குள் வடக்கு- கிழக்கு எங்கும் பேரினவாதிகளின் ஆதிக்கம் மேலோங்கும் என, வடக்கு முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வடமாகாணத்தில் பொருளாதார விருத்தி குறித்து எழுப்பப்பட்ட வாரமொரு கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”வட மாகாணத்தில் ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமான இராணுவத்தினரை தரித்து வைத்துக்கொண்டு, சகல நிர்வாக, பொருளாதார, அரசியல் உரித்துக்களையும் தம் கையில் வைத்துக் கொண்டு, பொருளாதார விருத்தி, நல்லிணக்கம் குறித்து பேசுவது எம்மைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுக்கும் நடவடிக்கையே. அந்த பொறியினுள் அகப்பட்டுக் கொண்டோமானால் இன்னும் பத்து வருடங்களில் வடக்கு- கிழக்கு மாகாணங்களில் பேரினவாத ஆதிக்கம் மேலோங்கிவிடும்.

மேலும், பொருளாதார விருத்தி, நல்லிணக்கம் என்று கூறித்திரியும் எமது அரசியல்வாதிகள் பலர் சுயநலத்துக்காகவே அதனை விரும்புகின்றார்கள். தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்கின்றதோ, இல்லையோ அவர்களுக்கு பை நிறையப் பணம் கிடைத்தால் போதும்.

பணத்தை பெற்றுக் கொண்டு அதற்குத் தட்சணையாக பௌத்த மதத் தலங்களை அமைக்கவிடுவதுடன், தென்னவர் இங்கு காலூண்ட இடமளிப்பார்கள். மொத்தத்தில் தமிழ் மக்களின் தனித்துவத்தைத் தமது பையை நிரப்பி தென்னவர்களுக்கு விற்று விடுவார்கள்.

எனவேதான் அரசியல் தீர்வு முதலில் வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அதற்காக நாம் மத்தியைப் புறக்கணிக்கவில்லை. செய்வதைச் செய்யுங்கள் ஆனால் எங்களையும் பங்குதாரர்கள் ஆக்கிச் செய்யுங்கள் என்றே கூறி வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.

மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 


 

தொடர்புடைய செய்திகள்

  • முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனைவரும் ஒன்றிணைந்து அனுஷ்டிக்க அழைப்பு  

    முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனைவரும் ஒரு அணியில் நின்று அனுஷ்டிக்கவேண்டும் என வடக்கு கிழக

  • போர்க்குற்ற விசாரணையின் பின்னரே நாம் அரசாங்கத்தை மன்னிப்போம்: சி.வி.விக்னேஸ்வரன்!  

    சர்வதேச உதவியுடன் போர்க்குற்ற விசாரணை நடத்தி இலங்கையில் நடந்தவை இனப்படுகொலையா என்பதை முதலில் அறிந்து

  • விக்கிக்கு எதிரான மனுவை 21 இல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்!  

    வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை எதிர்வரும் 2

  • நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் இலங்கையின் கடப்பாடு குறித்து ஐரோப்பா வலியுறுத்தல்  

    மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இலங்கை

  • சி.வி.யின் ஆட்சேபனை மனு நிராகரிப்பு  

    வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை மனுவினை மேன்முற


#Tags

  • CV Wigneswaran
  • north and east
  • Reconciliation
  • rights
  • உரிமைகள்
  • சி.வி.விக்னேஸ்வரன்
  • நல்லிணக்கம்
  • வடக்கு கிழக்கு
    பிந்திய செய்திகள்
  • யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
    யாழில் இரு சகோதரர்கள் கடத்தல்: பொலிஸில் முறைப்பாடு!
  • யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
    யாழ். கொடிகாமம் பகுதியில் ரயில் மோதி ஒருவர் படுகாயம்!
  • ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
    ‘யெலோ வெஸ்ட்’ அமைப்பினர் 14ஆவது வாரமாகவும் ஆர்ப்பாட்டம்!
  • கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
    கொழும்பில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் படுகாயம்!
  • கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
    கூட்டு ஒப்பந்தத்திற்கு எதிராக ஹற்றனில் ஆர்ப்பாட்டம்!
  • குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
    குசல் பெரேரா பதிவு செய்த சாதனைகள்!
  • பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
    பிரபல சுவிஸ் நடிகர் உயிரிழப்பு!
  • தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
    தலவாக்கலையில் அமைக்கப்பட்ட வீடுகள் மக்களிடம் கையளிப்பு!
  • அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
    அரசியலில் நான் பணம் சேர்க்க வரவில்லை – அனந்தி
  • ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
    ‘அயோக்யா’ படத்துக்காக விஷால் 48 மணிநேர சாதனை
  • வானொலி
  • தொலைக்காட்சி

Copyright © 2019 Athavan News. All rights reserved.