வடக்கு பாடசாலைகளில் அமுலுக்கு வருகிறது சி.சி.ரி.வி கமெரா
In இலங்கை April 30, 2019 8:22 am GMT 0 Comments 2419 by : Yuganthini

வடக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு சி.சி.ரி.வி கமெராவை (CCTV) பொருத்துமாறு பாடசாலை அதிபர்களுக்கு அம்மாகாணத்தின் கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் வலியுறுத்தியுள்ளார்.
பாடசாலை மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே எஸ்.சத்தியசீலன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக எதிர்வரும் 6ஆம் திகதி, இரண்டாம் தவணைக்காக பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாடசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அதில் ஒரு கட்டமாக பாடசாலைகளில் சி.சி.ரி.வி கமெராவை (CCTV) பொருத்துவதன் ஊடாக பாடசாலை வளாகத்தினை அதிபர் கண்காணித்து நிலைமைகளை அறிந்துகொள்ள முடியும்.
ஆகையால், சி.சி.ரி.வி கமெராவை (CCTV) பொருத்துவதற்கு நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளோம்” என எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.