வடமராட்சியில் வெடிபொருட்கள் கண்டெடுப்பு

வடமராட்சி கிழக்கு, அம்பன் பகுதியில் வீடு கட்டுவதற்கு தோண்டிய அத்திவார குழிக்குள் இருந்து இன்று (சனிக்கிழமை) மாலை வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸாா் கூறியுள்ளனா்.
அம்பன் பகுதியில் வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்காக பொதுமகன் ஒருவா் அத்திவாரம் தோண்டியுள்ளாா். இதன்போது அத்திவார குழிக்குள் ஒரு பிளாஸ்டிக் பரல் காணப்பட்டது.
குறித்த வீட்டார் பிளாஸ்டிக் பரலை சோதித்தபோது அதற்குள் பெருமளவு வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடா்ந்து பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் பிளாஸ்டிக் பரலுக்குள் இருந்து பெருமளவு வெடிபொருட்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.