வடமேற்கு லண்டனில் கத்திக்குத்து: இளைஞர் பலி!
In இங்கிலாந்து April 24, 2019 11:08 am GMT 0 Comments 1914 by : shiyani

வடமேற்கு லண்டனில் நேற்று இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவமொன்றில் 21 வயது இளைஞரொருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹார்ல்ஸ்டன் பகுதியில் நேற்று இரவு 9 மணியளவில் பல ஆண்கள் அடங்கிய கும்பல் ஒன்றினால் இந்த இளைஞர் தாக்கப்பட்டிருக்கலாமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளான இளைஞர் அவசரசேவை பிரிவினரால் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு போதிலும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகத்தின்பேரில் இதுவரை ஏழு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.