வட்டுக்கோட்டை உப்புவயல் குளம் இராணுவத் தளபதியினால் திறந்து வைப்பு!
In இலங்கை December 17, 2020 5:54 am GMT 0 Comments 1417 by : Yuganthini
வட்டுக்கோட்டை- தென்மேற்கு உப்புவயல் குளம் இராணுவ தளபதி சவேந்திர சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.
யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதியின் வழிகாட்டலில் தியாகி அறக்கொடை நிறுவனத்தினரின் நிதிப்பங்களிப்பில், வட்டுக்கோட்டை தென்மேற்கு உப்புவயல் குளம் புனரமைப்பு செய்யப்பட்டு, இன்றைய தினம் (வியாழக்கிழமை) பொது மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இராணுவத்தினரால் கடந்த மூன்று மாதமாக புனரமைப்பு செய்யப்பட்ட குளத்தினை, கொரோனா ஒழிப்பு செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான லெப்டினல் ஜெனரல் சவேந்திர சில்வா திறந்து வைத்தார்
யாழ்.நண்பர்கள் அமைப்பு, வட்டுக்கோட்டை தென்மேற்கு விவசாய சம்மேளனம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார, யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதுவர், வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர், வடக்கு மாகாண நீர்ப்பாசன பணிப்பாளர் மற்றும் இராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.