வட கொரியாவை நிறுவிய கிம் சங்கின் மகள் உயிருடன் உள்ளாரா? 7 ஆண்டுகால சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி

வட கொரியாவை நிறுவிய கிம் சங்கின் மகள் கிம் கியாங், பொதுவெளியில் 7 ஆண்டுகளுக்கு பின் தோன்றியுள்ளார்.
இவரது கணவர் ராஜ துரோக குற்றஞ்சாட்டப்பட்டு தற்போதைய வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் உத்தரவினால் கொல்லப்பட்டார்.
அதன் பின் பொது வெளியில் தோன்றாமல் இருந்த இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
கணவர் கொல்லப்பட்ட பிறகு கிம் கியாங் நாடு கடத்தப்பட்டிருக்கலாம் அல்லது அவரும் கொல்லப்பட்டிருக்கலாம் எனப் பரவலாகக் கருதப்பட்டு வந்த நிலையில், அந்த ஊகங்களுக்கு இந்த புகைப்படம் பதில் அளிப்பதாக அமைந்துள்ளது.
இதேவேளை, இப்படியான சூழ்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கிம் ஜோங் உன் அருகில் அமர்ந்திருக்கும் அவரது புகைப்படம் வெளியாகி இருப்பது, அவர் அரசு அதிகாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறாரோ என்ற கேள்வியைத் தோற்றுவித்துள்ளது.
கிம் கியாங், தற்போதைய வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன்னின் தந்தை கிம் ஜோங் இல்லின், தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.