வடமாகாண ஆளுநருக்கு எதிராகச் செயற்படும் அவரது அதிகாரி!
In இப்படியும் நடக்கிறது February 10, 2019 3:37 pm GMT 0 Comments 1680 by : Ravivarman

வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனின் மொழிக்கொள்கைக்கு எதிர்மாறாக அவரது மக்கள் தொடர்பு அதிகாரி செயற்படுகிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், கடந்த ஜனவரி 9ஆம் திகதி யாழ்ப்பாண அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றவுடன் வடக்கு மாகாண அரச நிறுவனங்களில் மும்மொழிக்கொள்கை வரும் ஏப்ரல் 9ஆம் திகதிக்கு முன்னர் சீரமைக்கப்படும் என்று அறிவித்தார்.
அத்துடன், வட.மாகாணத்தின் அரச நிறுவனங்களில் காணப்படும் மொழிப் பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளினை மேற்கொள்ளும் பொருட்டு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் சுவாமிநாதன் விமல் தலைமையில் ஐவரடங்கிய சிறப்புக் குழுவொன்றையும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் நியமித்தார்.
இந்த நிலையில் ஆளுநரின் கொள்கைக்கும் அவரது நடவடிக்கைகளுக்கும் எதிர்மாறாக அவரது மக்கள் தொடர்பு அதிகாரி தனது வாகனத்தில் சிங்கள மொழியில் மட்டும் எழுதிய அறிவித்தல் பலகை ஒன்றை காட்சிப்படுத்தியுள்ளார்.
மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இந்தச் செயற்பாட்டை வலையத்தள விமர்சகர்கள் தற்போது கடுமையாக விமர்சித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.