‘வணிகங்களும் மனித உரிமைகளும்’ என்ற திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவி!

ஆசியாவில் வணிகங்களும் மனித உரிமைகளும் என்ற திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு உதவிகளை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்றிட்டம் தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து, அபிவிருத்தி செயற்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி ரொபேர்ட் ஜக்காம் அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.
“கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட அச்சம் மற்றும் ஸ்திரமற்ற நிலையின் காரணமாக உலகலாவிய ரீதியில் மனித உரிமைகள் நிலைவரம் மோசமடைந்து வருவதனை அவதானிக்க முடிகின்றது.
கொரேனா வைரஸ் தொற்றினால் பெருமளவான வணிக நடவடிக்கைகள் பெரும் சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளன.
தற்போதைய நிலையிலிருந்து ஒரு சமூகம் என்றவகையில் நேர்மறையான விதத்தில் முன்நோக்கிப் பயணிப்பதற்கு முன்னெப்போதையும் விட வணிகங்கள் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டியது அவசியமாகும்.
இத்தகைய நெருக்கடி நிலையிலுள்ள இலங்கையின் வணிகங்கள் அவற்றின் மனித உரிமைகள் விவகாரங்களைக் கையாள்வதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி செயற்திட்டம் உதவிகளை வழங்கவுள்ளது.
அத்துடன்,அரச மற்றும் தனியார் வணிகங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் வழிகாட்டல்களைப் பின்பற்றி மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதற்கு ஊக்கப்படுத்தல்கள் வழங்கப்படவுள்ளன” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.