வரக்காபொல சந்தேகநபருடன் மேலும் இருவர் கைது
In இலங்கை April 24, 2019 4:13 am GMT 0 Comments 2179 by : Dhackshala

வரக்காபொலவில் கைது செய்யப்பட்டவருடன் தொடர்புள்ள மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த சந்தேகநபரின் வீட்டிலிருந்து ஒருவரும் அவர்களுடன் தொடர்புகொண்டிருந்த மேலும் ஒரு சந்தேகநபருமே ஹெம்மாத்தகம பகுதியில் இன்று (புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் வரக்காபொலவில் இன்று காலை சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் வான் ரக வாகனம் ஒன்றும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
புலனாய்வு அதிகாரிகள், விசேட அதிரடிப்படையினர் மற்றும் வரக்காபொல பொலிஸ் அதிகாரிகளும் இணைந்து அங்குருவெல்ல பகுதியில் வீடொன்றை சோதனையிட்டபோது அவர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது அங்கிருந்து சந்தேகத்திற்கிடமான மோட்டர்பைக் ஒன்றும் தொலைத்தொடர்பு உபகரணங்கள் நான்கும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.