வரலாற்றில் சாதனையுடன் கூடிய நேரத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான விவாதத்தினை 12 மணித்தியாலங்கள் நடாத்துவதற்கு நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற தகவல் தெரிவிக்கின்றன.
12 மணித்தியாலங்கள் இவ்விவாதம் அரங்கேறினால், வரலாற்றில் ஒருநாள் விவாதமொன்றிற்காக கூடிய அளவு நேரம் ஒதுக்கப்பட்ட முதல் சந்தர்ப்பமாக இது பதிவுசெய்யப்படும்.
இதன்படி, குறித்த விவாதம் எதிர்வரும் 4ஆம் திகதி காலை 9.30 முதல் இரவு 9.30 வரை இடம்பெறவுள்ளது.
கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை எதிர்நோக்கியிருந்த நிலையில் பிரதமர் ரணிலை பதவி விலகுமாறு அழுத்தம் கொடுக்கப்பட்டு வந்தது. அதன் பின்னணியிலேயே ரணிலுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
14 காரணங்களை உள்ளடக்கியதாக அந்த நம்பிக்கையில்லா பிரேரணை அமைந்துள்ளது. அதில் 12 காரணங்கள் மத்திய வங்கியின் பிணைமுறியுடன் தொடர்புடையதாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.