வரவு செலவுத் திட்டம் தொடர்பான கோப் குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் முன்வைப்பு
In இலங்கை December 2, 2020 2:46 am GMT 0 Comments 1389 by : Dhackshala

வரவு செலவுத் திட்டம் தொடர்பான அரசாங்க நிதி பற்றிய குழுவின் (கோப்) இரண்டாவது அறிக்கை இன்று (புதன்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இம்முறை வரவுசெலவுத் திட்டம் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பது இந்த அறிக்கையின் ஊடாகத் தெளிவுபடுத்தப்படும்.
குறித்த அறிக்கையின் இறுதி வரைபு குறித்து கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு கடந்த நவம்பர் 30ஆம் திகதி கூடியது.
இதில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ த சில்வா, டிலான் பெரேரா மற்றும் இசுறு தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கல்வி போன்று அதிக நிதி அவசியமான துறைகளில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்கால திட்டமிடலில் வெளிநாட்டுக் கடன்களைப் பெற்றுக்கொள்ள இக்குழு இதன்போது இணக்கம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.