வர்த்தகப்போர்: எமது நலன்களைப் பாதுகாக்க தீர்மானிப்போம் -சீனத் தூதுவர்
In உலகம் March 23, 2018 5:08 am GMT 0 Comments 1411 by : Suganthini
வர்த்தகப்போரை ஆரம்பிக்க அமெரிக்கா விரும்பினால், தேவையான அனைத்து நடவடிக்கைளுடனும் சீனா அதன் சொந்த நலன்களைப் பாதுகாப்பதற்கான தீர்மானத்தை எடுக்குமென, அமெரிக்காவுக்கான சீனத் தூதுவர் CuiTianai தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘அமெரிக்காவுடனோ அல்லது, வேறெவருடனோ வர்த்தகப்போரை ஆரம்பிக்க நாம் விரும்பவில்லை. ஆனால், வர்த்தகப்போருக்கு எவராவது விரும்பினால், இதற்குச் சீனா அஞ்சாதென்பதுடன், நாம் சண்டையிடுவோம்’ என்றார்.
மேலும், ‘சீன –அமெரிக்க உறவைப் பேண வேண்டுமென்பதுடன், இதற்காகச் சரியான அணுகுமுறையை நாம் கடைப்பிடிக்க வேண்டும். இந்நிலையில், இரு நாடுகளுக்குமிடையில் பரஸ்பர நம்பிக்கையைப் பேணுதல், ஒத்துழைப்பை மேம்படுத்துதல் உள்ளிட்ட அணுகுமுறைகள் மூலம் நாம் சிறந்த வெற்றியை அடைய முடியும். இந்த அணுகுமுறைகளை நாம் இன்னும் பின்பற்றி வருகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.
சீனாவின் இறக்குமதிக்கான சுங்கவரி விதிப்பு உடன்படிக்கையில் 60 பில்லியன் அமெரிக்க டொலர்வரை விதிக்க, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று கையொப்பமிட்டுள்ளார். இதனையடுத்து, அமெரிக்காவுக்கான சீனத் தூதுவர் இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.