வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்த ஒப்புதல்: பிரித்தானியா-ஐரோப்பிய ஒன்றியம் அறிவிப்பு!
In இங்கிலாந்து December 13, 2020 2:33 pm GMT 0 Comments 2212 by : Litharsan

பிரெக்ஸிற்றுக்குப் பின்னரான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன ஒப்புக்கொண்டுள்ளன.
வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது குறித்து ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என பிரதமர் பொரிஸ் ஜோன்சனும் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் உர்சுலா வொன் டெர் லேயனும் முன்னர் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், பிரெக்சிட் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு இரு தரப்பும் ஏற்றுக்கொண்டுள்ளன.
இதன்படி, பேச்சுவார்த்தைகளை பிரஸ்ஸல்ஸில் நடத்துவதற்கு இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்த இக்கட்டான கட்டத்தில் ஒரு உடன்பாட்டை எட்டமுடியுமா என்பதை அறிய, இந்தப் பேச்சுவார்த்தைகள் எவ்வளவு காலம் தொடரும் என அவர்கள் தெரிவிக்கவில்லை.
எனினும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய வரும் 31 திகதியுடன் முழுமையாக வெளியேறுகிறது. இந்நிலையில், இதற்கு முன்னர் ஏற்படுத்தப்படும் எந்தவொரு ஒப்பந்தத்திலும் வாக்களிக்க இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடாளுமன்றத்திற்கு காலம் வழங்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.