வறுமையை ஒழிக்க பலமுயற்சிகளை மேற்கொண்டவர் எம்.ஜி.ஆர்.- பிரதமர் மோடி

வறுமையை ஒழிக்க பலமுயற்சிகளை மேற்கொண்டவர் எம்.ஜி.ஆர் என அவரின் 104ஆவது பிறந்த நாளில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவரான எம்.ஜி.ஆர்.இன் 104ஆவது பிறந்த நாள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன்படி, சென்னையில் உள்ள கட்சியின் அலுவலகத்தில் எம்.ஜி.ஆர். சிலைக்கு, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாடு துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதேவேளை, எம்.ஜி.ஆர். குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவில், “பாரத ரத்னா எம்.ஜி.ஆர். பலரின் இதயங்களில் வாழ்கிறார். திரை உலகமாக இருந்தாலும் அல்லது அரசியலாக இருந்தாலும் அவர் பரவலாக மதிக்கப்படுகிறார்.
தனது முதல்வர் பதவிக் காலத்தில், வறுமை ஒழிப்புக்கு அவர் பல முயற்சிகளைத் தொடங்கினார். மேலும், பெண்கள் அதிகாரம் குறித்தும் வலியுறுத்திவந்தார். எம்.ஜி.ஆருக்கு அஞ்சலி செலுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.