வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் சேவைகள் வழமைபோல் இடம்பெறும்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் செயற்பாடுகள் வழமைபோல் இடம்பெறும் என வலிவடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகு உட்பட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபை ஊழியர் ஒருவருக்கு நேற்றைய தினம் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் குறித்த ஊழியர் மின்மோட்டார் இயக்கும் கடமையினை புரிபவரே தவிர பிரதேச சபை ஊழியர்களோடு நேரடித் தொடர்பு கொண்டிருக்கவில்லை.
குறித்த ஊழியர் வலி வடக்கு பிரதேச சபையின் தெல்லிப்பளை உபஅலுவலகத்தில் கடமை புரிகின்றார். குறித்த ஊழியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதன் காரணமாக வடக்கு பிரதேச சபையின் செயற்பாடுகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
குறித்த நபருடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்களை தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் தனிமைப்படுத்தும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளனர்.
வலிவடக்கு பிரதேச சபையின் செயற்பாடுகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்டபவில்லை. வழமைபோல் சேவைகள் இடம்பெறும்“ எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.