வலி.வடக்கு பிரதேச சபை வரவுசெலவு திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!
In ஆசிரியர் தெரிவு November 30, 2020 6:58 am GMT 0 Comments 1388 by : Jeyachandran Vithushan

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உள்பட்ட வலி. வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றபட்டுள்ளது.
தவிசாளார் சோ.சுகிர்தனால் இன்று (திங்கட்கிழமை) 39 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் முன்வைக்கப்பட்டது.
இதற்கு ஆதரவாக 30 உறுப்பினர்களும் 3 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அத்தோடு 4 பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஈபிடிபியின் 6 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா 2 உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 3 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தனர். அகில தமிழ் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் நடுநிலை வகித்தார்.
இந்த நிலையில் வலி.வடக்கு பிரதேச சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 27 மேலதிக வாக்குகளால் வெற்றிபெற்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.