வலைத்தளங்களில் வைரலாகிவுள்ள நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் படம்
In சினிமா September 15, 2018 10:15 am GMT 0 Comments 1604 by : Yuganthini

நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் இருவரும் நெருக்கமாக இருக்கும் படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதுடன் பல்வேறு நிகழ்வுகளுக்கும் ஜோடியாக சென்று வருவதாக சினிமா வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இதற்கு முன்னரும் இவர்கள் இருவரும் பல நிகழ்வுகளில் கலந்துகொண்டு படங்களை வெளியிட்டிருந்த நிலையில் இதில் விநாயகர் சதுர்த்தியை அனுஷ்டித்துவிட்டு அப்படத்தை பகிர்ந்து இருப்பதாக ரசிகர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்தவகையில் நயன்தாரா நடிப்பில் வெளியாகியுள்ள இமைக்கா நொடிகள் மற்றும் கோலமாவு கோகிலா ஆகிய படங்கள் வெற்றியடைந்துள்ளமையால் மேலும் படங்களிலேயே அதிகம் கவனம் செலுத்துவாரெனவும் திருமணம் செய்வதற்கு சில ஆண்டுகள் செல்லுமெனவும் கூறப்படுகின்றது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.