வவுனியாவில் இதுவரை 10,844 பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுப்பு- 32 பேருக்கு கொரோனா
In இலங்கை December 29, 2020 8:48 am GMT 0 Comments 1352 by : Yuganthini

வவுனியாவில் கடந்த மார்ச் 8 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி வரையில் 10 ஆயிரத்து 844 பேருக்கு, பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2,727 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டநிலையில், 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதேபோன்று செட்டிகுளம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 239 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டநிலையில் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கவில்லை.
வவுனியா வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 554 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டநிலையில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
வவுனியா தெற்கு சுகாதார வைத்திய அதிகாரிபிரிவில் 380 பேருக்கு பரிசோதனை முன்னெடுக்கப்பட்டநிலையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இவற்றைவிட வவுனியா பொதுவைத்தியசாலை, பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலை, கைத்திராமணி மற்றும் ஒமேகாலைன் ஆடைத்தொழிற்சாலைகள், வவுனியா பொலிஸ்திணைக்களம் போன்றவற்றில் எடுக்கப்பட்ட பரிசோதனைகளையும் சேர்த்து மொத்தமாக 10844 பேருக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவர்களில் 32 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இனிவரும் காலங்களில் பி.சி.ஆர்.பரிசோதனையை அதிகரிப்பதற்கான தீர்மானங்களும் இன்றைய விசேட கூட்டத்தில் எடுக்கப்பட்டிருந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.