வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம் – மூவர் கைது
In இலங்கை April 15, 2019 11:10 am GMT 0 Comments 2678 by : Yuganthini
வவுனியா, கோவில்குளம் பகுதியில் இளைஞர் குழுவொன்றினால் கார் மற்றும் மோட்டார் சைக்கிள், அடித்து நொறுக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வவுனியா, கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் மூவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா கோவில்குளத்தில் தரித்து நின்ற கார் மற்றும் முச்சக்கரவண்டியை மதுபோதையில் வந்த இளைஞர் குழு அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனால் கார் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கும் இளைஞர் குழுவிற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய மூவரை கைது செய்துள்ளதுடன் கார் மற்றும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா குற்றத்தடுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.