வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயங்களில் விசேட ஆராதனைகள்
In இலங்கை April 28, 2019 4:00 am GMT 0 Comments 2366 by : Dhackshala
இராணுவம், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் வவுனியா மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவலாலயங்களில் விசேட ஆராதனைகள் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
இதன்போது தேவாலயங்களுக்கு செல்பவர்களினை பொலிஸார் சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே தேவாலயங்களுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். அத்தோடு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்களின் புனித தினமான ஈஸ்டர் தினத்தில் கொழும்பிலும் மட்டக்களப்பிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட பல்வேறு இடங்களில் தற்கொலை தாக்குதல் இடம்பெற்றிருந்தது.
இதனையடுத்து தொடர்ந்தும் தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கப்பட்ட நிலையில் இலங்கையிலுள்ள பல மதஸ்தலங்களில் ஆராதனைகள், பூஜைகள் இடம்பெறுவது தவிர்க்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே இன்று வவுனியாவில் இராணுவம், பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினரின் பாதுகாப்பிற்கு மத்தியில் கிறிஸ்தவ தேவலாலயங்களில் விசேட ஆராதனைகள் இடம்பெற்றிருந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.