வவுனியாவில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை
In இலங்கை December 21, 2020 7:37 am GMT 0 Comments 1444 by : Dhackshala

வவுனியாவில் சுகாதார விதிமுறைகளை மீறியவர்களுக்கு எதிராக பொலிஸார் கடுமையான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் கொரோனா இரண்டாவது அலை வேகமெடுக்க தொடங்கியுள்ளதை அடுத்து, அதனைக் கட்டுப்படுத்தும் முகதாக பொலிஸாரினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதற்கமைய இன்றைய தினம் (திங்கட்கிழமை) வவுனியா நகர் பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களில் செல்பவர்கள், சுகாதார முறைகளை உரிய முறையில் பின்பற்ற தவறியவர்களுக்கு எதிராக பொலிசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.