வவுனியாவில் மினி சூறாவளி: அதிகமான வீடுகள் சேதம்
In இலங்கை April 29, 2019 5:17 am GMT 0 Comments 2499 by : Yuganthini
வவுனியா, பனிக்கன்குளம் கிராமத்தில் மினி சூறாவளியினால் 10 இற்கும் மேற்பட்ட வீடுகள் பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளன.
நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3.30 மணியளவில் வீசிய மினி சூறாவளியுடன் கூடிய மழையினால் வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டதுடன் பயன்தரு மரங்களான தென்னை, வாழை மற்றும் பல மரங்கள் சரிந்து வீழ்ந்துள்ளன.
மேலும் வீடொன்றின் கூரையானது சுமார் 100 மீற்றர் வரையில் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன் அதற்கு பயன்படுத்தப்பட்ட மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளன.
இந்நிலையில் தற்காலிக வீடுகள் முற்றாக சேதமைந்துள்ளதுடன் வீட்டினுள் இருந்த பொருட்கள் அனைத்தும் மழையினால் நனைந்துள்ளதாகவும் கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் 10 தற்காலிக வீடுகளும் 4 நிரந்தர வீடுகளும் சேதமடைந்துள்ளதாக கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சேத விபரங்கள் தொடா்பாக கிராம சேவகர் தகவல்களை பதிவு செய்துள்ள நிலையில், வீடுகள் பாதிப்படைந்தவர்களை தங்க வைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.