வவுனியாவில் முஸ்லிம் இளைஞன் படுகொலை
In ஆசிரியர் தெரிவு May 3, 2019 9:03 am GMT 0 Comments 4768 by : Risha
வவுனியா சாலம்பைக்குளம் பகுதியில் முஸ்லிம் இளைஞரொருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு இன்று (வெள்ளிக்கிழமை) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்தவர் மீது, வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அசிட் வீச்சு தாக்குதலுக்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உடலில் பல இடங்களில் வெட்டுக்காயங்களுடன் சடலம் வவுனியா பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பூவரசங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
படுகொலை செய்யப்பட்ட நபர் இம்திஹாப் அஹலம் (வயது 32) என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.


மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.