வவுனியாவில் விசேட தேடுதல் நடவடிக்கை
In இலங்கை April 25, 2019 3:49 am GMT 0 Comments 2209 by : Dhackshala
வவுனியாவில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து அதிரடி சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர்.
இந்த சுற்றிவளைப்புகள் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியிலிருந்து 8 மணி வரையில் மேற்கொள்ளப்பட்டன.
வவுனியா பட்டான்ச்சூர் மற்றும் சாளம்பைக்குளம் பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இதன்போது வீதியில் செல்லும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களையும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டது. எனினும் சந்தேகத்துக்கிடமாக எவரும் கைது செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவின் முக்கிய இடங்களான வைத்தியசாலை, பேருந்து நிலையம், மதஸ்தளங்கள் என்பற்றில் கடந்த சில தினங்களாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் பொதிகளுடன் வருபவர்களிடம் சோதனையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவங்களையடுத்து நாட்டில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.