வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை – தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ்!
In இந்தியா May 8, 2019 8:48 am GMT 0 Comments 1980 by : Krushnamoorthy Dushanthini

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து 45 ஆயிரம் சிறுப்பான்மையின வாக்களர்களின் பெயர் நீக்கப்பட்டமை குறித்து விளக்கமளிக்க வேண்டுமென உயர்நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து தமிழ் மீனவர் கூட்டமைப்பினர் சார்பில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவில், ஆளும் கட்சிக்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தின் காரணமாகவே 45 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இதன்காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்தப்பட்ட தேர்தல் இரத்து செய்யப்பட வேண்டும் என்றும், மே 23ஆம் திகதி இடம்பெறவுள்ள வாக்கு எண்ணிக்கைக்கும் தடைவிதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வழக்கு விசாரணை கோடை விடுமுறையை தொடர்ந்து விசாரிக்கப்படும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.