வாக்கு இயந்திரங்களில் கோளாறு: வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க வலியுறுத்து

வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்ட இடங்களில், வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் பல வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது என காங்கிரஸ் முறைப்பாடு தெரிவித்துள்ளது. பல வாக்குச் சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும் என தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்க வரும் மூத்த குடிமக்களுக்கு தேர்தல் ஆணையம் உரிய வசதி ஏற்படுத்திக் கொடுக்கவில்லை எனவும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வாக்குப்பதிவு சதவீதம் குறையும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் கோளாறு ஏற்பட்ட 384 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 692 ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பழுதான இடங்களில் உடனுக்குடன் மாற்றப்படுகிறது. காலை 6 மணி முதல் 8 மணிக்குள் 305 இயந்திரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.