வாழ்நாளை அதிகரிக்கும் சித்ரா பௌர்ணமி விரதம்!
In ஆன்மீகம் April 18, 2019 8:43 am GMT 0 Comments 4091 by : Krushnamoorthy Dushanthini

சித்ரா பௌர்ணமி நன்னாளில் சித்ர குப்தருக்கு விரதமிருப்பதால் வாழ்நாள் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
இந்த விரதத்தினை பொதுவாக பெண்களே கடைப்பிடிக்கின்றனர். அவர்கள் தன் கணவனின் நீண்ட ஆயுளிற்காக பிரார்த்தனை செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். சித்திரை நட்சத்திரம் கூடிவரும் பௌர்ணமி நாளில் இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
உண்மையில் சித்ரகுப்தன் சிவன் வரைந்த ஓவியத்தில் இருந்து தோன்றியவராவார். இவர் மனிதர்கள் தேவர்கள் உள்ளிட்ட அனைத்து ஜீவராசிகளின் பாவ புண்ணியங்களை கணக்கிட, சிவபெருமானால் நியமிக்கப்பட்டார் என புராணங்கள் கூறுகின்றன.
சித் என்றால் மனம் எனவும் குப்த என்றால் மறைவு எனவும் பொருள்படுகிறது. இதன்படி நம் மனதில் மறைவாக நாம் செய்யும் பாவ – புண்ணியங்களை இவர் கணித்து சொல்வார் என புராணங்கள் அறியத்தருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.